அதிபர் லயன் ஜெ.றஜீவன் சர்வதேச தலைமத்துவப் பயிற்சி நெறிக்காக நேபாளம் பயணம்!


சமூக சேவைக்காக அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் இவருக்கு சாமசிறி தேசகீர்த்தி எனும் கௌரவத்தையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted on:
2017-04-06 22:14:45

அதிபர் லயன் ஜெ.றஜீவன் சர்வதேச தலைமத்துவப் பயிற்சி நெறிக்காக நேபாளம் பயணம்!

சர்வதேச லயன்ஸ் கழகத்தால் வழங்கப்படும் தலைமத்துவப் பயிற்சியான ALLI (Advanced Lions Leadership institute) பயிற்சிக்காக இலங்கையில் இருந்து தேசகீர்த்தி லயன்  ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நிகழ்வானது நேபாளம் நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் 
ஏப்ரல் 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

பிரபல கல்வியலாளரும் சமூக சேவையாளருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் அவர்கள் சிறுவயதிலேயே பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றார் என்பதுடன் கல்விக்காகவும் சமூக சேவைக்காகவும் பல்வேறு பயிற்சி நெறிகளை நிறைவு செய்ததுடன் பல்வேறு விருதுகளையும் சான்றிதழ்கள் மற்றும் கௌரவங்களை வென்ற இளந் தலைவரும் ஆவார்.

சர்வதேச லயன்ஸ் கழகத்தின் இலங்கை 306 B1 மாவட்டத்தின் வலயத் தலைவராக கடமையாற்றும் இவர், குறுகிய காலத்திலேயே மக்களுக்கு பாரிய நலத்திட்டங்களை வழங்கி உயர்ந்த தலைமத்துவத்தை அடைந்தவர் ஆவார். அத்துடன் இவரின் மக்கள் நலத்திட்டங்களுக்காக அதிக விருதுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சமூக சேவையாளன் மட்டுமே அல்லாது கொழும்பில் நடைபெற்ற RLLI (Regional Lions Leadership Institute) தனது தத்துவப் கல்வியைப் பெற்றவராவார்.

அத்துடன் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இலங்கை அதிபர் சேவைத் தரத்தில் உப அதிபராக கடமையாற்றும் இவர் பாடசாலையில் முன்னேற்றத்திற்காக அதிபருடன் இணைந்து பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் வடக்கு இலங்கையில் மிகவும் பிரபலமான ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரி எனும் ஆங்கில மொழி பயிற்சிப் பாடசாலை ஒன்றை சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து இயக்கி அதன் நிறைவேற்று தலைவராகவும் இயங்கி வருகின்றார்.

மேலும் சமூக மறுவாழ்வுக்கான அமைப்பு எனும் நிறுவனத்தை ஆரம்பித்து அதன் ஸ்தாபகத் தலைவராகவும் இருந்து தன்னுடைய நேரடிப் பங்களிப்பில் மக்களின் பிணி தீர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, அரசியல் மற்றும் சமூகம், கலை, இலக்கியம் மற்றும் ஊடகத்துறை போன்றவற்றில்  சிறந்த ஆளுமையும் தீர்க்க தரிசனமும் கொண்டு செயற்படும் வாழும் செயல்வீரர்  லயன் றஜீவன்ஆவார்.

இவரின் கல்வி மற்றும் சமூக சேவைக்காக அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் இவருக்கு சாமசிறி தேசகீர்த்தி எனும் கௌரவத்தையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.